பிக் பாஸ் 3: நாள் 52 – சந்திரமுகியாக மாறிய மது
நேற்று அபிராமியை மையம் கொண்டிருந்த வனிதா புயல் இன்று மதுமிதா பக்கம் தன் பார்வையைத் திருப்பிச் சுழன்றது.
டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. மது பஜ்ஜி போட்டுக் கொண்டிருக்க, முகினைக் கூப்பிட்டு சமையல் சம்பந்தமாகப் பாட்டு பாட சொன்னார். கல்யாண சமையல் சாதம் பாட்டைப் பாட, மதுவுக்குப் பக்கத்தில் நின்று கவினும், சாண்டியும் கோரஸ் பாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சேரன், "கொஞ்சம் தள்ளி நின்னு பாடுங்கப்பா! எச்சில் தெறிச்சறப் போகுது" எனச் சொன்ன உடனே கைதட்டி சிரித்தனர் கவினும் சாண்டியும். இந்த நிகழ்வு பார்க்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சாண்டி மேல் சேரன் தொடர்ச்சியாக வைக்கின்ற குற்றச்சாட்டே இது தான். மற்றவர்கள் புண்படுகின்ற மாதிரி கலாய்க்காதீங்க எனச் சொல்லிட்டே தான் இருக்கார். ஆனால் சாண்டி கேட்கிற மாதிரி இல்லை.
முந்தைய நாள், "அவர் வந்ததில் இருந்து ஈ ஓட்டிக் கொண்டு தான் இருக்காரு" எனச் சொல்லிச் சிரித்தனர்....