Shadow

பிக் பாஸ் 3: நாள் 52 – சந்திரமுகியாக மாறிய மது

bigg-boss-3-day-52

நேற்று அபிராமியை மையம் கொண்டிருந்த வனிதா புயல் இன்று மதுமிதா பக்கம் தன் பார்வையைத் திருப்பிச் சுழன்றது.

டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. மது பஜ்ஜி போட்டுக் கொண்டிருக்க, முகினைக் கூப்பிட்டு சமையல் சம்பந்தமாகப் பாட்டு பாட சொன்னார். கல்யாண சமையல் சாதம் பாட்டைப் பாட, மதுவுக்குப் பக்கத்தில் நின்று கவினும், சாண்டியும் கோரஸ் பாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சேரன், “கொஞ்சம் தள்ளி நின்னு பாடுங்கப்பா! எச்சில் தெறிச்சறப் போகுது” எனச் சொன்ன உடனே கைதட்டி சிரித்தனர் கவினும் சாண்டியும். இந்த நிகழ்வு பார்க்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சாண்டி மேல் சேரன் தொடர்ச்சியாக வைக்கின்ற குற்றச்சாட்டே இது தான். மற்றவர்கள் புண்படுகின்ற மாதிரி கலாய்க்காதீங்க எனச் சொல்லிட்டே தான் இருக்கார். ஆனால் சாண்டி கேட்கிற மாதிரி இல்லை.

முந்தைய நாள், “அவர் வந்ததில் இருந்து ஈ ஓட்டிக் கொண்டு தான் இருக்காரு” எனச் சொல்லிச் சிரித்தனர். இன்று கும்பலாகச் சேர்ந்து இப்படி கைதட்டி கிண்டல் செய்கின்றனர். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்றே தோன்றுலாம். சாண்டி கவினையோ, முகினையோ கலாய்த்தார் என்றால் அவங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது திரும்பக் கலாய்த்துவிட்டுப் போய்விடுவார்கள். அதனால் அந்த விஷயம் அங்கே பெரிதாகத் தெரியாது. ஆனால் சேரனுக்கும் இவங்களுக்கும் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு. கலாய்க்கிறதெல்லாம் சேரனுக்கு வராது. இதே காரணத்துக்காக தான் மோகன் வைத்யா கண்ணீர் விட்டு அழுதார். கண்டிப்பாக இது சேரனுக்கு உறுத்திக் கொண்டே தான் இருக்கும். இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் போது, என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு பிரச்சினையில் இது வெடிக்கும். சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக்குகிறார் என அன்று சேரன் தான் வில்லனாவார் (நோட் பண்ணி வச்சுக்கோங்க).

இவ்வளவு நேரம் நின்று சீன் போட்டு இதை செய்ய வேண்டியது இல்லையென மது பஜ்ஜி போட்டதை விமர்சனம் பண்ணிக் கொண்டிருந்தார் கஸ்தூரி. அதாகப்பட்டது இதே பஜ்ஜியைப் போட இவருக்கு 5 நிமிசம் போதுமாம். ‘ஆமா இவரு பெரிய பாலக்காட்டு மணி அய்யர் பேத்தி, அப்படியே அறுத்துத் தள்ளிருவாங்க?’ என மைண்ட் வாய்ஸ் கேட்கும் போதே, ‘நீங்க சர்க்கரை பொங்கல் செய்த அழகுக்கு சமையலைப் பற்றி எல்லாம் பேசவே கூடாது’ என நோஸ்கட் செய்தார் ஷெரின். செம! கொல மாஸ்.

அந்தப் பக்கம் கவின், கேமராவிடம் கஸ்தூரி பேசுவதைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். வொய் ப்ளட், சேம் ப்ளட் மொமன்ட்.

அடுத்து டாஸ்க் முடிந்து வாரா வாரம் நடக்கிற சம்பிரதாயத்துக்கு வந்தனர். நல்ல பெர்ஃபாமர்களாக ஷெரினும், மதுவும் செலக்ட் ஆனார்கள். ஓவர் ஆல் வீக்லி பெர்ஃபாமன்ஸ்க்கு சேரன் பேர் முதலில் சொல்லப்பட்டாலும், தர்ஷன் தான் வின் ஆனார். அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமருக்கு கஸ்தூரி அன்னபோஸ்ட்டில் ஜெயித்தார். மேட்டர் என்னவென்றால், ஏற்கெனவே ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தனர். இரண்டாவது யாரென வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது.

டாஸ்க் யார் சுவாரசியமாகச் செய்யவில்லை என்று தான் கேள்வி. சேரன், லோஸ்லியா பேரைச் சொன்னார். தாமதமாக வந்ததைக் காரணமாகச் சொன்னார். ஆங்கிலம் பேசினதால் அபிராமி பேரைச் சொன்னார் கவின். இதில் விஷ்யம் என்னவெனில், ஆங்கிலம் அதிகமாகப் பேசுகிறவர்களை அடுத்த வாய்ப்பில் சிறைக்கு அனுப்புவதாக ஏற்கெனவே பேசி முடி பண்ணிவைத்திருந்தனர். அதை எல்லோரும் ஒத்துக் கொண்டனர். ஆனால் இந்த இடத்தில், மது இன்னொரு கருத்தை முன் வைக்கிறார். அபி மனதால் ரொம்பப் பாதிக்கபட்ருக்கிறார். சிறைக்குப் போவது இன்னும் அவரை வேதனைப்படுத்தும், அதனால் இந்தத் தடவை வார்னிங் கொடுத்து விட்டு விடலாம் எனச் சொன்னது ஏற்றுக் கொள்ளக் கூடிய பாயின்ட் தான். “நாம் இதை ஏற்கனவே பேசி முடிவு செஞ்சது தானே? நீங்களும் அங்க இருந்தீங்க. இப்ப ஏன் ஒத்துக்க மாட்டேங்கறிங்க?” என கவின் விளக்கம் கேட்டார். “நாம பேசினதுக்கு அப்புறம் தான் அபிக்கு அந்தப் பிரச்சினை நடந்தது. அதனால தான் இந்தத் தடவை வேணாம்னு சொல்றேன்” என மதுவும் சொல்கிறார். ஆனால் மெஜாரிட்டியில், அபி சிறைக்குப் போகவேண்டுமென முடிவு செய்யப்படுகிறது. முதலில் எதிர்ப்புத் தெரிவிக்கும் அபி, பின்னாடி ஒத்துக் கொள்கிறார். இது வரைக்கும் ஆல் இஸ் வெல். மது சொன்னதும் நல்ல விஷயம் தான். கவின் முடிவும் நல்லது தான்.

ஆனால் இதற்குப் பின் பேசினதைத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பப் கவினும் மதுவும் பேசிக் கொண்டே இருந்தது தான் உட்சபச்ச எரிச்சல்.

சீன் 1 – கவினும் மதுவும் மறுபடியும் பேச, அங்கே வந்த அபிராமி, கவினிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து விட்டுப் போகிறார். மறுபடியும் அதையே பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த கஸ்தூரி, “அவ்ளோ தான்டா, பூமாதேவி, வாயைப் பொளக்கப் போறா! எல்லோரும் உள்ள போகப் போறோம்” எனச் சொல்லிவிட்டுப் போனார்.

சீன் 2 – அதே வாக்குவாதம் இந்தத் தடவை தர்ஷனும் விளக்கம் சொல்லியும் மது கேட்கிறதாக இல்லை. திரும்ப அதே பேச்சு. கடுப்பான தர்ஷன், ‘டேய் வாடா, இவகிட்ட போய் பேசிட்டு’ எனச் சொல்லி கவினை நகர்த்திக் கூட்டிக் கொண்டு போறார்.

சீன் 3 – சேரன் ஏற்கெனவே, ‘தன் பேரை விவாதத்துக்குக் கூட எடுத்துக்காமல் போய்ட்டாங்களே!’ என வருத்தத்தில் இருந்தார். அவரிடம் போய் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார் மது.

சேரன்: இது ஒரு கேம் ஷோ. இங்க எல்லாம் ஒரு டஅணியாக இருந்து விளையாடுறாங்க.

மது: நான் கேம் விளையாட வரல. நான் நானா இருக்கத்தான் வந்தேன்.

சேரன்: அதுக்கு நீ இங்க வந்திருக்கக் கூடாது.

மது: நான் யார் டீம்லயும் இல்ல. நான் தனியா தான் நிக்கறேன். எல்லார் கூடவும் பழகுறேன்.

அப்பொழுது அபி மதுவிடம் பேச வருகிறார். அப்பொழுது அங்கே வந்த கஸ்தூரி, “அவ்ளோ தான்டா. பூமாதேவி, வாயைப் பொளக்கப் போறா. எல்லோரும் உள்ள போகப் போறோம்” எனச் சொல்லிவிட்டுப் போனார்.

இதற்கு நடுவில், லோஸ்லியா வந்து மதுவை கத்தி விட்டுப் போனார். “நேற்று அபியிடம் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்கும் பொழுது அபியோட மனநிலை பத்திக் கவலைபட்டீங்களா?” எனச் சம்பந்தமே இல்லாமல் மதுவிடம் கேட்டுவிடுப் போனார்.

உண்மையில் மது பேசியதே அபிக்கு ஆதரவாகத்தான். கேள்வி கேட்டதும் முகினிடம் தான். ஆனால் நேற்று அத்தனை பிரச்சினை நடக்கும் போது மிக்சர் சாப்ப்பிட்டுக் கொண்டிருந்த லோஸ்லியா, இன்று இந்தப் பேச்சு பேசுகிறார். சரி நேற்று பேச வேண்டாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அபியை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் மது. அப்பவும் தன் பேர் வந்ததுக்கு மட்டும் குதிச்ச லோஸ்லியா, அபிக்காக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் மதுவிடம் சண்டைக்குப் போகிறார். “நேற்று அவளை ஹர்ட் பண்ணிட்டு, இன்னிக்கு அவளுக்கு சப்போர்ட் செய்யற மாதிரி நடிக்காதீங்க” என – அதுவும் மதுவை பார்த்து சொன்னதில் என்ன நியாயமெனத் தெரியவில்லை.

நேற்று, அபி மட்டும் தான் தப்பு செய்தார், முகின் மேல் எந்த தப்புமே இல்லையென வாதாடினது கவின் குரூப் தான். இந்தப் பெண் அவங்க கூடக் கூட்டணி போட்டு ஜாலியாக உள்ளார். அவர்களிடம் அபிக்காக எதுவுமே பேசவில்லை. இதே பேச்சை வனிதாவிடம் பேசிருக்கலாமே!

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி எனச் சொல்லப்படுவது போல, மது தான் இங்க சாஃப்ட் டார்கெட். அதான் லோஸ்லியாவுக்கெல்லாம் கோவம் வருகின்றது.

மதுவுக்கு லாஸ் பேசினதை விட தர்ஷன் சொன்ன ஒரு வார்த்தை தான் உறுத்துகின்றது.

‘இங்க பெண்களை ஆண்கள் டாமினேட் பண்றாங்க. அவங்களை யூஸ் பண்றாங்க’ என வனிதா சொன்னது மது மனதில் பச்சக்கென ஒட்டிக் கொண்டது. ஏனெனில் அந்தக் கேள்வியை முதலில் கேட்டவரே மது தான்.

வெளியே போய்விட்டு வந்த வனிதாவும் அதையே சொல்ல, ‘ஓக்கே நாம கரெக்டான ரூட்ல தான் போய்ட்டு இருக்கோம். நாம நினைச்சது சரிதான்’ என ஒரு தைரியம் வருகிறது.

நேற்றி அபி பிரச்சினையின் பொழுதும், மொத்த பழியும் அபி மேல் தான் விழுந்தது. பெண்கள் மட்டுமே ஜெயிலுக்கு போய்க் கொண்டுள்ளனர். பெண்கள் தான் அதிகளவில் நாமினேஷனில் இருக்கிறார்கள். ‘இவகிட்ட போய் பேசிட்டு இருக்க! வா போலாம்’ எனச் சொன்னது லூப்ல ஓடிக் கொண்டே இருக்கு. இதெல்லாம் சேர்ந்து மது நேற்று போராளி அவதாரம் எடுக்க வேண்டியதாப் போய்விட்டது. வெளியே சேரன் அவ்வளவு சொல்லியும், உள்ளே வந்த உடனே சண்டைக்கு போய்விட்டார்.

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி, கூடவே சாப்ட் டார்கெட் என இரண்டும் சேர்ந்ததால் எல்லோரும் கட்டி ஏறினதில், தான் என்ன பேசறோம்பென்றே தெரியாமல் முழுதாக சந்திரமுகியாக மாறிப்போனார் மது. சாண்டிக்கெல்லாம் கோவம் வந்தது என்றால் பாருங்களேன்!

சாதாரணமாக ஆரம்பித்த பிரச்சனை, எங்கெங்கோ போய் முடிஞ்சு மது இன்று வில்லன் ஆனார்.

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடற செயலுக்கு பெர்ஃபக்ட் உதாரணமாக நேற்று வனிதா நடந்துகொண்டார்.

‘மனசுல எதுவும் வச்சுக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நேரா கேப்பேன். பின்னாடி போய்ப் பேச மாட்டேன்’ என்பதெல்லாம் மதுவின் குணங்களாக இருந்தாலும், சமயோசிதமாக யோசிக்க தெரியவில்லை எனில் ஒரு தம்படிக்கு பிரயோசனம் இல்லை.

நல்ல பாயின்ட் எடுத்து ப்பேசி மற்றவர்களைச் சுலனமாகக் கன்வின்ஸ் பண்ண முடிந்த கவினுக்கு, ஒரு கான்வர்சேஷனை எப்படி முடிக்கவேண்டுமெனத் தெரிய மாட்டேங்கிறது. ஒரே விஷயத்தை சலிக்காமல் பேசிக் கொண்டே இருக்கார். யேய்யப்பா.. முடிலய்யா.

வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்த சாண்டி குரூப், உள்ளே கிச்சனில் வனிதா, மது, சேரன் பேசிக் கொண்டிருந்ததை டப்பிங் செய்து கொண்டிருந்தனர். தக்காளி இது மட்டும் வனிதாவுக்குத் தெரிய வந்தால், அப்போ இருக்குடி உங்களுக்கு. ‘சேரனை இதுல இழுக்காதீங்க’ என லோஸ்லியா சொன்னதை யாரும் கண்டுக்கவே இல்லை. அதற்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் அபியும் சிரித்துக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்துப் பதறிப்போய் ஓடி வந்த மது, ‘ஏம்மா உனக்காகத்தான அவங்க கிட்ட சண்டை போட்டு ரத்தக்காயத்தோட இருக்கேன்? நீ என்னடான்னா அவங்க கூடச் சிரிச்சு விளையாடிட்டு இருக்கே?’ என மூக்கை சிந்திக் கொண்டிருந்தார்.

அபிராமியை மையம் கொண்டு சிதைத்த வனிதா புயல் இன்று மதுமிதாவைப் பதம் பார்த்தது. இறுதியில் சேரனிடம் மையம் கொண்டு தர்ஷனைப் பற்றி கொம்பு சீவி விடுவதுடன் முடிந்தது நாள்.

மகாதேவன் CM