Shadow

Tag: Bodhai yeri buddhi maari thirai vimarsanam

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது. நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் எ...