பைரி விமர்சனம்
புறா பந்தயத்தில் ஏற்படுகின்ற முன்பகை சிலரின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே பைரி திரைப்படத்தின் ஒன்லைன்.
தமிழ் சினிமாவில் Cult movies வகையறா சினிமாக்கள் மிக மிக குறைவு. தமிழ் சினிமாவில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கொண்டாடப்பட்ட கல்ட் மூவிஸ் என்று சொன்னால், ஆரண்ய காண்டம், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், சூது கவ்வும் போன்ற திரைப்படங்களைக் கூறலாம். விக்ரம் வேதா மற்றும் பீட்ஸா படங்களைக் கூட ஒரு வித்த்தில் கல்ட் திரைப்படங்களாக எடுத்துக் கொள்ளக் கூடும்.
இது போன்ற திரைப்படங்களில் என்ன இருக்குமென்றால் யதார்த்தம் ரத்தமும் சதையுமாக இருக்கும், யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான கதைகூறும் முறை இருக்கும். எல்லாக் கதாபாத்திரங்களும் சரி தவறுகள்: கலந்து படைக்கப்பட்டு இருப்பார்கள். திரைமொழியில் சொல்ல முயன்றால் Grey Shade அதாவது நல்லவனென்றும் சொல்ல முடியாத கெட்டவன் என்றும் ச...