Tag: C2H
“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்
‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை சேரன் முடித்து எட்டு மாதங்கள் ஆகிறது. தன் படத்தை வெளியிட்டால், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை நிலுவுகிறது என்பதால் மாற்றுவழியை யோசித்தார். 2013இல், 298 படங்கள் தணிக்கைச் சானிறிதழ் பெற்றுள்ளன. அவற்றில் 155 படங்கள்தான் வெளியாகியுள்ளன. மீதி படங்களுக்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வு காண, கடந்த எட்டு மாதமாக மக்களை அணுகி, திரையரங்கிற்கு வராமல் ஏன் திருட்டு டி.வி.டி.களையும், இணையத்தில் தரவிறக்கம் செய்தும் படம் பார்க்கிறார்கள் என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதை வீடியோவாகத் திரையிட்டனர். அனைவருக்குமே தெரிந்த பதிலைதான் ஆய்வில் சேரன் பெற்றுள்ளார். டிக்கெட் விலை ஏற்றம் மற்றும் தியேட்டர் கேண்டீனில் விற்கப்படும் பாப்-கார்ன், கோலா முதலியவைகளுக்கு ஆகும் செலவுதான் பிரதான குறையாக மக்களால் சொல்லப்படுகிறது. மல்ட்டிஃப்ளக்ஸில் நடக்கும் பார்க்கிங் கொள்ளையைப் பற...
வீட்டிற்கே வரும் புது சினிமா!
திரையுலகில் அவ்வப்போது விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில மாற்றங்கள் உடனடியாக நடந்து விடும். சில மாற்றங்கள் நடக்க கால தாமதம் ஆனாலும் நடந்தே தீரும்.
காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஃபிலிம் சுருள் HARD DISKகளிலும், SD CARDகளிலும் சுருண்டு கொண்டது. 10 கிலோ எடையுடன் ஒரு மனிதன் தூக்கிச் சுமந்து அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஃபிலிம் கேமரா தடாலென டிஜிட்டல் கேமராவாக கைகளுக்கள் வந்தது. அதைப் போலவே, அகன்றத் திரையில் மிரண்டு பார்த்த அந்த அழகிய சினிமா வேறு தளங்களுக்கு நகர்ந்து பார்வையாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப தேவையான சினிமாவைப் பார்க்கும் வண்ணம் விஞ்ஞானம் தொலைக்காட்சியாகவும், கணினியாகவும் மாற்று சாதனங்களை நமக்கு வழங்கியது.
இருப்பினும், காட்டு யானைகளை அழிப்பது கஷ்டம்; அழிக்கவும் கூடாது என்பது போல திரையரங்கம் என்பது ஓர் அபரிதமான உணர்வுகளைத் தரும் ஓரிடம். இன்றைய ஜாம்...