
Calcutta, I’m sorry விமர்சனம்
சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் இளகுவோரின் அகப்பயணம் எவ்வாறாக இருக்கும் என்பதே இந்த ஆங்கிலப் படத்தின் மையக்கரு.
குன்னூரில் இசை ஆசிரியராகப் பணி புரிபவர் அமாண்டா ரைட். கணவரையும் மகளையும் பிரிந்து இசையே வாழ்க்கையென வாழும் ஆங்கிலோ இந்தியரான அமாண்டாவிற்கு தண்டுவட மரப்பு நோய் (Multiple Sclerosis) கண்டறியப்படுகிறது. வாழ்வின் நிலையாமையையும், விர...