
எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாகும் சாந்தினி
நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே! அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாந்தினிக்குத் தனி இடம் உண்டு. ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.
‘சித்து +2’ -இல் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது.
இவரது நடிப்பைக் கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்தக் கதை சாந்தினிக்கு மிகவும் பிட...

