
Chi Pae Thu – சுயாதீன இசைப்பாடல்
சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசைக்கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் திரையிசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டண்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டண்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டண்ட் இசைக் கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்தப் புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடல...

