
“சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி
"ஒரு கதாபாத்திரத்தின் தன்மை, குண நலன், பராக்கிரமம் ஆகியவை அந்தக் கதாபாத்திரத்தின் ஆடை அமைப்பின் மூலமாக தான் ரசிகர்களுக்குட் சென்று அடையும். பல வருடங்களாக பிரபலமான ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரியும் அனு பார்த்தசாரதி கிராமியப் படங்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணியைப் பற்றி விவரிக்கிறார். வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றிப் பாடல்கள் மூலமாக வண்ணங்கள் தெறிக்கும் வகையில் ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு பின்னணி அமைப்புக்குத் தோதாக இருக்க வேண்டும். பொன்ராம் படம் என்றாலே அது வண்ண மயமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
கதை உருவாகும் காலக் கட்டத்திலேயே ஆடை வடிவமைப்பாளரையும் கலந்தாலோசித்து வரும் கலாச்சாரத்தை இயக்குநர் பொன்ராம் கொண்டு வந்து இருக்கிறார். இது எங்களது பணியைச் சுலபமாக்கியது. சிவகார்திகேயன் இந்தப் படத்தில் தனது உற்சாகத்துக்குத்தோதான ஆடை அணிந்து இருக்கிறார். மேற்கத்திய...


