Shadow

Tag: Couple Friendly திரைப்படம்

Couple Friendly விமர்சனம்

Couple Friendly விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எதிர்பாராத் தருணத்தில் வீசும் குளிர் தென்றலை அனுபவித்த உணர்வைத் தருகிறது இப்படம். ஷிவாக்கும் மித்ராவுக்கும் இடையேயான நட்பார்ந்த காதலைப் பார்வையாளர்களுக்குக் கவித்துவமாகக் கடத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் நிலையாமையைக் குறித்தும், நாளையென ஒன்றில்லை என்பதாகக் கருதி இன்றே வாழ்வைக் கொண்டாடித் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் படம் அழுத்தமாகப் பதிந்து அசரடிக்கிறது. தெலுங்குப் படத்தின் டப்பிங் போலிருக்கே என்ற எண்ணத்தை, ஓரிரு காட்சிகளுக்குள் மறையச் செய்து, படம் நம்மை அலேக்காக உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த மாயத்தைப் போட்டி போட்டுக் கொண்டு செய்துள்ளனர் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனும், இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனும். கவிதை போல ரசித்து ரசித்து திரைச்சட்டகத்தை (frames) வைத்துள்ளார் தினேஷ். படத்தின் இயக்குநரான அஷ்வின் சந்திரசேகரும் ஒளிப்பதிவாளர் என்பதால், படம் ஒளிப்பதிவு ரீதியாக மிகவும் நே...