
ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்
“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன்.
நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும்.
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நா...

