Shadow

Tag: David Leitch

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும் களத்தில் குதித்து ஆக்ஷன் அதகளம் செய்கின்றனர். முக்கியமாக, க்ளைமேக்ஸில் சாமோ (Samoa) தீவுகளில் நடக்கும் சண்டை செம ஜாலியாகவும், சீட் நுனியில் அமரச் செய்யும் அற்புதமான ஆக்ஷனாகவும் உள்ளது. ஹெலிகாப்டரைப் பறக்க விடாமல், சங்கிலியால் பிணைத்து, ஒற்றுமையாகச் செயற்பட்டு வில்லனைக் கதி கலங்க வைக்கும் காட்சி ...