Shadow

Tag: Despicable Me 2

டெஸ்பிக்கபிள் மீ 2

டெஸ்பிக்கபிள் மீ 2

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார். யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். அவனைப் பிடிக்க, 'பாம்பின் கால் பாம்பறியும்' எனச் சொல்லி க்ரூவின் உதவியை நாடுகிறது ஏ.வி.எல். (Anti-Villian League). க்ரு வில்லனைக் கண்டுபிடிக்கும், முன் ஏ.வி.எல். அதிகாரியான லூசி வைல்ட் மீது காதலில் விழுந்து விடுகிறார். வில்லனைக் கண்டுபிடித்தாரா என்றும் அவரது காதல் என்னானது என்பதும்தான் படத்தின் முடிவு. அந்த பிரகஸ்பதியின் பெயர் எ...