
கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி
7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'.
படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது.
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றி தான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்” என்றார் நடிகர் டேனியல்.
“படத்தில் ஒப்பந்த...