பைரவா விமர்சனம்
பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம்.
தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை.
வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம்.
விஜய் அழகாக, அசத்தலாக, இளமையாகத் துள்ளலோடு படம் நெடுகே வருகிறார். நாயகனின் அறிமுகம் தான் மாஸ் ஹீரோ படத்தின் டோனை செட் செய்ய உதவுவது. மிகப் பரிதாபகரமாக அதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் பரதன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குத் தகுந்தபடி 'மாஸ்' எனும் விஷயம் முழுப் படத்திலுமேயே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சோபிக்கவில்லை.
மர...