Tag: Director Jai

ஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை
நான்கு சுவருக்குள், பெண்ணால் அவமதிக்கப்படும் ஓர் ஆண் இயலாமை குமைய வெளியேறுகிறான். வெளியில் வந்து, அந்த இயலாமையைக் கோபமாகத் தன்னை விட பலவீனமான நபரிடம் காட்டுகிறான். அந்த நபர் மற்றொரு ஆணாக இருப்பான். ஓர் ஆண் தோற்க, அவனுக்குச் சம்பந்தப்பட்ட பெண் காரணமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அந்த ஆணுக்குத் தெரிந்த மற்றொரு ஆணுக்குச் சம்பந்தப்பட்ட பெண், பல ஆண்கள் தோற்கக் காரணமாக இருப்பாள்.
"உன்னால மீனுக்கு ஒரு பொறி கூட வாங்கிப் போட முடியாது" என்ற வசனத்தில் தொடங்குகிறது தோற்ற ஆண்களின் கதை. எத்தனை பேர் வந்தாலும், தெறிக்க விடும் நாயகர்களுக்குப் பழக்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் நிச்சயமாகப் புதுமையான திரை அனுபவத்தைத் தருமென நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படக்குழுவினர். ராஜ் பரத், தேஜஸ்வினி, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’...