ரசவாதி – சித்த வைத்தியரும், ஐ.டி. பெண்ணும்
இயக்குநர் சாந்தகுமாரின் முதல் படமான மௌன குரு, தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதோடு கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான மகாமுனி 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது.
இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இன்று வெளியாகியுள்ள புதிய ட்ரெய்லரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி, நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட திர...