32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Done Media

405 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 13 / 27
செய்திகள் வரிசை (பக்கம் 13)
500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி சினிமா

500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

2019இல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மைத் தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத […]

08/06/2019 Dinesh R
ஜீவன் நடிக்கும் அசரீரி சினிமா

ஜீவன் நடிக்கும் அசரீரி

அறிமுக இயக்குநர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் ‘அசரீரி’ எனும் அறிவியல் புனைவு படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராணக் குறிப்புகளைக் கூடத் தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன். இயக்குநர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் […]

04/06/2019 Dinesh R
சிம்புதேவனின் ‘கசட தபற’ சினிமா

சிம்புதேவனின் ‘கசட தபற’

‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் பார்த்ததும் அது ஆன்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அதை மறுக்கும் இயக்குநர் சிம்புதேவன், “எங்கள் திரைப்படமானது இந்த வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆன்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்” என்றார். மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது, […]

27/05/2019 Dinesh R
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம் சினிமா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம்

கனா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. அந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவையையும், ரசிக்கக் கூடிய […]

25/05/2019 Dinesh R
மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம் சினிமா

மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்

“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குநராகப் பரிணமிக்கிறார் நடிகர் போஸ் வெங்கட். போஸ் வெங்கட், “பிப்ரவரி 18ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை […]

24/05/2019 Dinesh R
Mr. லோக்கல் விமர்சனம் சினிமா

Mr. லோக்கல் விமர்சனம்

நயன்தாரா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பட்டாளத்தை தன் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்திற்கு அத்தியாவசியமான கதையும் திரைக்கதையும் மட்டும், சென்னையின் நீர்ப்பஞ்சத்திற்கு நிகராய் வறண்டு போயுள்ளன. ராஜேஷ் படத்தில் கதையா முக்கியம்? நிச்சயமாக இல்லை தான். ஜாலியான வசனங்கள், தட்டுத்தடுமாறி நாயகியின் கடைக்கண் பார்வையைப் பெறத் துடிக்கும் நாயகனின் அலம்பல்கள், சின்னதாய் ஒரு ஃபேமிலி சென்ட்டிமென்ட் என தனது முதல் […]

19/05/2019 Dinesh R
100 விமர்சனம் சினிமா

100 விமர்சனம்

தனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர். நேடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் முதற்பாதி தேவையில்லாத காட்சிகளால் அலைக்கழிக்கிறது. அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக ‘எருமை சாணி’ விஜய் […]

11/05/2019 Dinesh R
தடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா சினிமா

தடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா

கதைத் தேர்வில் அதீத கவனத்துடன் இருக்கும் ஆதி, தற்போது அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். “நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்தக் கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்குத் தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரைச் சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது […]

08/05/2019 Dinesh R
ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி சினிமா

ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி

‘கயல்’ படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த ஆனந்தி தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளைக் கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. “ராவண […]

06/05/2019 Dinesh R
K-13 விமர்சனம் சினிமா

K-13 விமர்சனம்

K13 என்பது சோவியத் யூனியனின் பிரபலமான ஏவுகணைகளில் ஒன்று. அமெரிக்காவின் சைட்வைண்டர் எனும் ஏவுகணையை ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து K13 ஏவுகணையைத் தயாரித்து அசத்தியது சோவியத் யூனியன். அப்படி, இப்படத்தின் க்ளைமேக்ஸில் பிரதான கதாபாத்திரமான திலீப், ஒரு சம்பவத்தைத் தனக்குச் சாதகமாய் ‘ரிவர்ஸ்’ செய்து பயன்படுத்திக் கொள்கிறான். ஆக, K13 எனும் தலைப்பை ரிவர்ஸ் செய்யும் சாதுரியத்திற்கான குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பாரில் சந்தித்துக் கொள்ளும் மதியழகனும் மலர்விழியும், ஒன்றாக மலர்விழியின் வீட்டிற்குச் செல்கின்றனர். விழிப்பு வந்து […]

03/05/2019 Dinesh R
100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா சினிமா

100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். “சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் நகைச்சிவைப் […]

02/05/2019 Dinesh R
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம் அயல் சினிமா

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

சூப்பர் வில்லன் (!?) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன பாதிக்கும் மேற்பட்ட மனித இனத்தை மீட்க, எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இறுதியில் சூப்பர் ஹீரோகளுக்கே வெற்றி! முடிவு சுபம் தான் எனினும், அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொள்ளும் அந்த உணர்ச்சிகரமான பயணம், இந்தப் படத்தைத் திரையுலக வரலாற்றின் மிக முக்கியமான படமாக உயர்த்துகிறது. ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில், சூப்பர் ஹீரோ படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். […]

27/04/2019 Dinesh R
காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo சினிமா

காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரைப் பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. பாடலாசிரியர் மற்றும் DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து […]

09/04/2019 Dinesh R
ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம் சினிமா

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ஆஸ்கர் விருது வாங்கிய செளண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி நடிகராக அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்டத்தக்கது. ரசூல் பூக்குட்டிக்கு, திருச்சூர் பூரம் திருவிழாவின் முழு இசையையும் ஒலிப்பதிவு செய்யவேண்டுமென ஆசை. அது அவருக்கு சாத்தியமானாதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் டாக்குமென்ட்ரி வகைமையைச் சேர்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுக்க, முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்க, ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் இந்தியாவின் மிகப் பெரும் திருவிழா. அவ்விழாவின் இசையை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்வது […]

06/04/2019 Dinesh R