32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி

Dinesh R சேலம் Published: 06/05/2019 2 நிமிட வாசிப்பு Updated: 08/05/2019 சினிமா
எழுத்து அளவு:

Kayal-Anandhi-in-Ravana-Thottam

‘கயல்’ படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த ஆனந்தி தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளைக் கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. “ராவண கோட்டம்” அந்த மாதிரியான ஒரு திரைப்படம். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களைக் கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். மதயானை கூட்டம் படத்துக்குப் பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார்.

சாந்தனு பாக்யராஜ் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை முதன்முறையாகப் பார்த்த போது என்ன உணர்ந்தேனோ அதை நீங்களும் உணர்வீர்கள். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் நடனக் கலைஞராகவும் இருக்கிறார். அவருடன் நடனம் ஆடியது ஒரு சிறந்த அனுபவம்” என்றார் நடிகை ஆனந்தி.

விக்ரம் சுகுமாரன் இயக்கும் ராவண கோட்டம் படத்தை கண்ணன் ரவி குரூப் சார்பில் திரு. கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், முருகன் (லூசிபர் புகழ்) மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தற்போது, முதல்கட்ட படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.