32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

Dinesh R சேலம் Published: 06/04/2019 2 நிமிட வாசிப்பு Updated: 02/07/2019 சினிமா
எழுத்து அளவு:

oru-kathai-sollatuma-movie-review

ஆஸ்கர் விருது வாங்கிய செளண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி நடிகராக அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்டத்தக்கது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரசூல் பூக்குட்டிக்கு, திருச்சூர் பூரம் திருவிழாவின் முழு இசையையும் ஒலிப்பதிவு செய்யவேண்டுமென ஆசை. அது அவருக்கு சாத்தியமானாதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் டாக்குமென்ட்ரி வகைமையைச் சேர்ந்தது.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுக்க, முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்க, ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் இந்தியாவின் மிகப் பெரும் திருவிழா. அவ்விழாவின் இசையை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. முடியால் மலையைக் கட்டியிழுக்கும் மிகப் பெரிய சமாச்சாரம். 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, ‘The Sound Story’ என்ற பிராஜெக்ட்டை முடிக்கிறார் ரசூல். ‘தி செளண்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பிலேயே மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகிறது இப்படம்.

படத்திற்குள், பூரம் திருவிழாவின் இசையை ஒலிப்பதிவு செய்யும் ப்ராஜெக்ட்டின் தயாரிப்பாளருக்கும் ரசூலுக்கும் ஒத்து வராமல் போகிறது. கலைஞரை மதிக்காமல் எடுத்தெறியும் தயாரிப்பாளரின் ஆணவத்தைப் பொறுக்காமல் ப்ராஜெக்ட்டில் இருந்து வெளியறுகிறார். பூரத்தின் கலவையான இசையைக் கேட்கும் பேராவலிலுள்ள கண் தெரியாதவர்களைச் சந்திக்கிறார் ரசூல். தனது பணியின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் உணரும் ரசூல் தானே தயாரிப்பதென முடிவெடுக்கிறார். ஒரு தனி மனிதரின் ஈகோ கிளாஷினால், கடைசி நாள் ஒலிப்பதிவு முழுவதும் தடைப்படுகிறது. வடக்குநாதன் சிவன் அருளால், பதிவு செய்யப்படாத சூழலிலும், எப்படி ப்ராஜெக்ட் முடிக்கச் சாத்தியமானது என்பது நல்லதொரு ட்விஸ்ட்.

யானைகளைப் பற்றிய பெண் பாகனின் பேட்டி, செண்டை மேளம் கற்றுக் கொள்வது பற்றி பெருவனம் குட்டன் மாரரின் பேட்டி, வேட்டு போடுபவரின் பேட்டி போன்றவை படத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

எல்லாச் சவால்களையும் கடந்து, ‘தி செளண்ட் ஸ்டோரி’யை ரசூல் அரங்கேற்றும் பொழுது, பூரத்தின் இசைக் கொண்டாட்டம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அற்பதமான அனுபவத்தை வழங்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகருக்கு வாழ்த்துகள்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.