Shadow

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம்

sk17--gets-U

கனா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. அந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவையையும், ரசிக்கக் கூடிய சுவாரசியமான தருணங்களையும் கொண்டிருக்கும். கூடவே நல்ல ஒரு மெஸ்சேஜுமுண்டு” என்றார்.

ஒட்டுமொத்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிக் கூறும்போது, “இது ஒரு அமைதியான மற்றும் அழகான அனுபவம், எல்லோரும் அதனை முழுமையாக அனுபவித்தோம். ரியோ ராஜின் அலட்டல் இல்லாத, மிகச் சிறப்பான நடிப்பு அவர் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. உண்மையில், இந்தப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களுமே யதார்த்தமானவை. நடித்த எல்லா நடிகர்களும் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். ஷிரின் காஞ்ச்வாலா வசன உச்சரிப்புக்காக தமிழ் வரிகளைப் புரிந்து கொள்ள படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். விரைவில் அவர் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஏற்கனவே ஆன்லைன் ஊடகங்கள் மூலம் மிகவும் ஒரு பிரபலமான முகமாக இருந்து வருகிறார். பல படங்களில் முக்கிய பங்காற்றி வரும் அவர் இந்தப் படத்துக்குக் கூடுதல் பலமாக இருப்பார். ராதாரவி சார் மற்றும் நாஞ்சில் சம்பத் சார் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணிபுரிவது என் பயணத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை மற்றும் என் ஸ்கிரிப்டை நம்பிய சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்றார்.

இளம் இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்திருக்கிறார். யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.