32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்

Dinesh R சேலம் Published: 24/05/2019 2 நிமிட வாசிப்பு Updated: 25/05/2019 சினிமா
எழுத்து அளவு:

Kanni-maadam-director-Bose-venkat

“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குநராகப் பரிணமிக்கிறார் நடிகர் போஸ் வெங்கட்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

போஸ் வெங்கட், “பிப்ரவரி 18ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்துக்கு ஆதரவாக இருந்தார். எங்கள் குழுவுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம். உண்மையில், கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் அனைவரையும் கட்டிப்பிடித்து தன் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்தக் காலத்தில், இது போன்ற உணர்ச்சிகரமான தருணங்களை ஒரு தயாரிப்பாளரிடம் பார்ப்பது எளிதல்ல” என்றார்.

மேலும், ‘கன்னி மாடம்’ படத்தின் சிறப்பம்சத்தைப் பற்றிக் கூறும்போது, “கன்னி மாடம் படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும். நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களைப் படம்பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்குச் சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, ‘நேட்டிவிட்டி’ காரணிகளுக்காக இந்த இடங்களில் முழுப் படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் ஹரி சாய் இசையில் உருவான அனைத்துப் பாடல்களும் ‘மான்டேஜ்’ முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் பற்றிய ஒரு பாடலை ரோபோ ஷங்கர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தோணி தாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். ஸ்ரேயா கோஷல் அல்லது சின்மயி உட்பட பல பிரபலங்களும் மீதம் உள்ள பாடல்களைப் பாட இருக்கிறார்கள்.

ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். கன்னி மாடம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.