32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Done Media

405 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 25 / 27
செய்திகள் வரிசை (பக்கம் 25)
விவேகம் விமர்சனம் சினிமா

விவேகம் விமர்சனம்

நாயகன் அஜித்தும், இயக்குநர் சிவாவும் மூன்றாம் முறையாக இணைகின்றனர். கிராமம், நகரம் என்று பயணித்தவர்கள், தேசிய எல்லைகளைக் கடந்து, Counter Terrorist Squad இல் பணிபுரியும் சர்வதேசக் காவலனாக அஜித்தை ப்ரோமோட் செய்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கும் நிழல் சமூகத்திற்கு விலைக்குப் போய் துரோகமிழைக்கிறார்கள் ஏஜென்ட் ஏ.கே.வின் நண்பர்கள். துரோகத்தில் இருந்து மீண்டு, நண்பர்களையும் பழி வாங்கி, உலகையும் எப்படிக் காக்கின்றார் என்பதுதான் படத்தின் ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை. அக்ஷரா ஹாசனின் அத்தியாயம் மிக […]

24/08/2017 Dinesh R
தரமணி விமர்சனம் சினிமா

தரமணி விமர்சனம்

‘தரமணி’ எனும் தலைப்பை, ஓர் ஏரியா பெயராகவோ ஸ்டேஷன் பெயராகவோ கொள்ளாமல், சாதாரண மக்களையும் ஐ.டி. மக்களையும் இணைக்கும் காரிடாரின் குறியீடாகக் கொள்ளலாம். பொருளாதாரச் சுதந்திரமுள்ள பெண்ணின் நடவடிக்கைகள் அவளைச் சார்ந்து வாழத் தொடங்கும் ஆணுக்கு எந்தளவுக்குப் பாதுகாப்பாற்ற உணர்வை ஏற்படுத்துமெனப் படம் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. படிச்ச முண்டை, தேவிடியா, பிட்ச் பிட்ச் பிட்ச், இங்க புழு பிடிச்சுடும் என இந்தப் படத்தில் வரும் வசனங்களுக்கு A செர்ட்டிஃபிகேட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் தான் இயக்குநர் ராம் […]

12/08/2017 Dinesh R
“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன் சினிமா

“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன்

நிபுணன் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு ஊடகங்களுக்கு உண்டென நன்றி தெரிவித்தது நிபுணன் படக்குழு. “நிபுணன் வரவேற்பிற்குக் காரணம் ஊடகத்தின் நேர்மையான விமர்சனமே! அதனுடன் மக்களின் கருத்தும் ஒன்றிப் போனது இந்தப் படத்தின் வெற்றிக்குப் மிக பெரிய அடித்தளமாகும்” என்றார் தயாரிப்பாளர் உமேஷ். “ நிபுணன் படம் 2015-இல் தொடங்கிய பின் இரண்டு வெள்ளங்களைப் பார்த்துவிட்டது. இந்தக் கதை எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜூன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது […]

01/08/2017 Dinesh R
விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து சினிமா

விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து

பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து, கவண் படம் மூலமாகத் திரைக்கதை எழுத்தாளரானார். தற்போது இவர், அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி, ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ”இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது பங்களித்ப்பை அளித்துள்ளேன். சினிமாவின் உயிர் […]

01/08/2017 Dinesh R
4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர் சினிமா

4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர்

துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகிறது இப்படம். இந்தப் படத்தைப் பற்றிய அறிமுக விழாவில், இயக்குனர் மணிரத்னமும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். “சோலோ தான் என் முதல் தென்னிந்திய படம். டேவிட் பாதி டப் செய்யப்பட்ட படம். சோலோவைத் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. இந்தப் படத்தில் 3 ஒளிப்பதிவாளர்களும் […]

28/07/2017 Dinesh R
திரி விமர்சனம் சினிமா

திரி விமர்சனம்

‘இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் திரி எனப் படத்திற்குத் தலைப்பு வச்சிருக்கேன்’ என இயக்குநரே தனது தலைப்பிற்கான பொருளை இசை வெளியீட்டு மேடையில் விளக்கியுள்ளார். படித்த மாணவனுக்கும், அரசியல் செல்வாக்குள்ள கல்வியறிவு இல்லாக் கல்லூரித் தாளாளருக்கும் நடக்கும் பிரச்சனையே ‘திரி’ படத்தின் கதை. கதைக்குள் செல்வதற்கு முன், பாரம்பரியமான முறையில் மிக அதிக நேரத்தைக் கதாபாத்திர அறிமுகத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ். ஹீரோவின் தந்தை, ஒழுக்கத்தின் மீது செலுத்தும் அதீத கவனத்தைத் தேவைக்கும் […]

14/07/2017 Dinesh R
பண்டிகை விமர்சனம் சினிமா

பண்டிகை விமர்சனம்

சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டிக்குப் பெயர் தான் பண்டிகை. பணத் தேவையின் பொருட்டு, நாயகன் கிருஷ்ணாவைப் பண்டிகையில் தோற்கும்படி பேசித் தயார் செய்கிறார் சித்தப்பு சரவணன். நாயகனோ சண்டையில் வென்று விட, சரவணனோ குடும்பம், வீடு, கடை என அனைத்தையும் இழந்துவிடுகிறார். அதிலிருந்து சரவணனை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்பான முதற்பாதி ஒரு கதையாகவும்; இரண்டாம் பாதியைத் தனிக் கதையாகவும் கொண்டு திரைக்கதை நீள்கிறது. கிருஷ்ணாவின் கேரியரில் இது அவருக்கு மிக […]

14/07/2017 Dinesh R
பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது சினிமா

பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சரோஜா படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. ஜூலை 12 அன்று, இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளம் பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிஜி […]

13/07/2017 Dinesh R
பண்டிகையின் மூன்று பாடல் சினிமா

பண்டிகையின் மூன்று பாடல்

ரங்கூன் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் ‘பண்டிகை ‘. இந்தப் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார். இப்படத்தைக் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம் பகிர்ந்து கொள்கையில், ”பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருந்தது. இப்படத்தில் 3 பாடல்கள் […]

12/07/2017 Dinesh R
பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா சினிமா

பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா

கிருஷ்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வரவுள்ள படம் பண்டிகை. “கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வைத் தந்ததோ, அதே உணர்வைப் பண்டிகை படமும் தருகிறது. இயக்குநர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம், அவரது இலக்கு வெற்றி […]

11/07/2017 Dinesh R