32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Done Media

405 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 23 / 27
செய்திகள் வரிசை (பக்கம் 23)
நல்ல நாள் பார்த்திருக்கும் சன் டி.வி. சினிமா

நல்ல நாள் பார்த்திருக்கும் சன் டி.வி.

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில், ‘அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட்’ மற்றும் ‘7C’s என்டர்டெயின்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் […]

10/01/2018 Dinesh R
சங்குசக்கரம் விமர்சனம் சினிமா

சங்குசக்கரம் விமர்சனம்

குழந்தைகளுக்கான ஒரு ஸ்பூஃப் பேய்ப்படம். தெறிக்க விட்டாலும், பேய்கள் யாரையும் கொல்வதில்லை. மாறாகச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தன் அறிவை மேம்படுத்திக் கொள்கின்றன பேய்கள். பாழடைந்த கோட்டை போன்ற பங்களாக்குள் சிக்கிக் கொள்ளும் ஒன்பது சிறுவர்களை பணப்பேய் பிடித்த மனிதர்கள் கொல்லப் பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சிறுவர்களைப் பேய்கள் எப்படிப் பாதுகாக்கின்றன என்பதுதான் படத்தின் கதை. படத்தில் அழகழகான சிறுவர்களின் பட்டாளம் ஒன்றுள்ளது. குட்டிப் பேய் மலராக நடித்திருக்கும் மோனிகா செம க்யூட். தனிமையில் விளையாட […]

31/12/2017 B R Murali Krishnan
நிமிர் – மகேந்திரன் சூட்டிய தலைப்பு சினிமா

நிமிர் – மகேந்திரன் சூட்டிய தலைப்பு

பொதுவாக ஒரு படம் எந்த வகையைச் சேரும், அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M.S.பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘நிமிர்’ என்ற தலைப்பைக் குறித்து இயக்குநர் […]

28/12/2017 Dinesh R
சென்னை2சிங்கப்பூர் விமர்சனம் சினிமா

சென்னை2சிங்கப்பூர் விமர்சனம்

மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். சிங்கப்பூர் அரசின் மீடியா டெவலப்மென்ட் வாரியமும் (MDA), தமிழ்த் திரையுலகமும் கை கோர்த்துள்ள முதற்படமிது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராகும் கனவில் ஹரீஷ் சென்னையில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கிறான். அங்கு அவனுக்கு என்ன நடந்தது என்றும், நினைத்தது போல் திரைப்படம் இயக்கினானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நாயகன் கோகுல் ஆனந்த பல ஃப்ரேம்களில் துல்கரை ஞாபகப்படுத்தும் சாடையில் உள்ளார். ஏமாற்றப்படும் கோபத்தில் […]

16/12/2017 Dinesh R
12-12-1950 விமர்சனம் சினிமா

12-12-1950 விமர்சனம்

ரஜினி பிறந்த நாள் தான் படத்தின் தலைப்பு. தொண்ணூறுகளில் நாயகனாக நடித்த செல்வா தான் படத்தின் இயக்குநர் செல்வா. 1998இல் கோல்மால் எனும் படத்தை இயக்கிய பின், 19 வருடங்கள் கழித்து இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். தன் பெயரையும் கபாலி செல்வா என மாற்றிக் கொண்டுள்ளார். அந்தளவிற்கு செல்வா ஒரு தீவிர ரஜினி ரசிகர். ரஜினி படத்துப் போஸ்டரை ஒருவன் கிழித்து விட, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் ரஜினி ரசிகரான குங்ஃபூ மாஸ்டர் எதிர்பாராத விதமாக […]

08/12/2017 Dinesh R
தென்னிந்திய ஆக்ஷன் நாயகியாகச் சன்னி லியோன் சினிமா

தென்னிந்திய ஆக்ஷன் நாயகியாகச் சன்னி லியோன்

சன்னி லியோனை யாரென அறியாதவரும் உண்டோ? சமீபமாக அவரது வரவால் கேரளாவின் கொச்சி நகரம் ஸ்தம்பித்தது எல்லாம் வரலாறு. அவ்வளவு புகழ் மிக்க சன்னி லியோன், நேரடித் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவுள்ளார். இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதைத் தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்தியக் கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். போராளிகள் தோளை உயர்த்தி டென்ஷன் […]

04/12/2017 Dinesh R
மிஸ்டர் சந்திரமெளலி – கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும் சினிமா

மிஸ்டர் சந்திரமெளலி – கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும்

‘நவரச நாயகன்’ கார்த்திக்கும், அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”’நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ போன்ற வெற்றி படங்களைக் கொடுத்து, ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றியைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அவரது மகனான கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள […]

28/11/2017 Dinesh R
‘அறம்’ ராமசந்திரன் சினிமா

‘அறம்’ ராமசந்திரன்

வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு படத்தின் பின்னணியில் இருப்பது அந்தப் படத்தின் கதை, இயக்கம், முன்னணி நடிகரின் நடிப்பு, இசை ஆகிய அம்சங்களைத் தாண்டிக் கதைக்குத் தூண்களாக விளங்கும் மற்ற கதாபாத்திரங்களின் பங்களிப்பும் தான். அந்த வகையில் தற்போது திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று, அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘அறம்’ திரைப்படத்தில், குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராமசந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. யார் இவர் என்று எல்லோரையும் […]

20/11/2017 Dinesh R
அறம் விமர்சனம் சினிமா

அறம் விமர்சனம்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர எல்லையில் இருக்கும் காட்டூர் எனும் கிராமத்தில், தன்ஷிகா எனும் நான்கு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மதிவதனி, எப்பாடுபட்டாவது சிறுமியை மீட்டு விட வேண்டுமெனப் போராடுகிறார். கண் கலங்காமல், இப்படத்தைப் பார்த்து விடுவது இயலாததொரு காரியம். சுபமான முடிவு தானெனினும், ஒரு சிறுமியை மீட்க கலெக்டர் தலைமையிலான அரசாங்க ஊழியர்கள் திணறுவதைப் பார்க்கப் படபடப்பாக உள்ளது. இது படமாக […]

11/11/2017 Dinesh R
அவள் விமர்சனம் சினிமா

அவள் விமர்சனம்

நிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குடி புகுபவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கதைக்கு, ‘அவள்’ என்பதை விட இன்னும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியிருக்கலாம். பேய்கள் என்றாலே, அவை பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளட்டை வலுவாக்கும் விதம் உள்ளது தலைப்பு. ஆண்ட்ரியா சித்தார்த் முதல் சந்திப்பை, அது காதலாக மாறுவதை, அவர்களுக்கு இடையேயான அன்யோன்யத்தை எனப் படத்தின் தொடக்கம் க்யூட்டானதோர் அத்தியாயமாக எடுக்கப்பட்டுள்ளது. பேய்ப் படம் […]

04/11/2017 Dinesh R
கதை பறையும் ரசூல் பூக்குட்டி சினிமா

கதை பறையும் ரசூல் பூக்குட்டி

கலைத் துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்கள் மிகச் சிலரே! அந்த மிகச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற செளண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது செளண்ட் டிசைன்கள் உலக பிரசித்திப் பெற்றவை. தற்பொழுது, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் […]

01/11/2017 Dinesh R