காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo
DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரைப் பதித்திருக்கிறது.
DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது.
பாடலாசிரியர் மற்றும் DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017இல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரைச் சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். பு...