Shadow

Tag: DOP Praveen Kumar

“தேஜாவு தானே முக்கோண விதியும், தொடர்பியலும்!” – ஜீவி ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்

“தேஜாவு தானே முக்கோண விதியும், தொடர்பியலும்!” – ஜீவி ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019இல் வெளியாகிப் புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, முதல் பாகத்தைப் போலவே இப்படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு அருமையாக அமைந்து வருகின்றது. ஜீவி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள பிரவீண் குமார், இப்படங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். "முதல் படத்தில் ப...