போதை ஏறி புத்தி மாறி – நாயகி துஷாரா
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள போதை ஏறி புத்தி மாறி படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், ப்ரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்தப் படத்தில் ராதாரவி, சார்லி, அஜய் மற்றும் இன்னும் சில நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காட்சி ரீதியாகப் படத்துக்குப் பக்கபலமாக இருக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.
“ஆரம்பத்தில், இயக்குநர் சந்துரு சார் என்னை அழைத்து, இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். படத்தின் முழுக் கதையைப் பற்றிக் கூட நாங்கள் பெரிதாக உரையாடவில்லை. பின், இந்தப் படத்தைப் பற்றி மிக நீண்ட காலமாக அவரது தரப்பில் இருந்து எனக்கு எந்தத் தகவலும் இல...