
‘ஈமெயில்’ திரைப்படம் – ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் த்ரில்லர்
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’ ஆகும். இப்படத்தில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.
ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையிலும், அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும்...


