32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

‘ஈமெயில்’ திரைப்படம் – ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் த்ரில்லர்

Dinesh R சேலம் Published: 09/12/2023 1 நிமிட வாசிப்பு Updated: 13/12/2023 Movie Posters
எழுத்து அளவு:

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’ ஆகும். இப்படத்தில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையிலும், அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும், பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.