“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன்
சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்' ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கே.ராஜன், “இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் கூட ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. மிகப் பெரிய படமான ...