எனக்கு End-யே கிடையாது – விமர்சனம்
கால் டாக்ஸி ஓட்டுநரான சேகர், ஒரு அழகான கவர்ச்சியான இளம்பெண் ஊர்வசியை நள்ளிரவு நேரத்தில் அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார். அங்கு அந்த இளம்பெண் சேகரை மது விருந்துக்கு அழைக்க, முன்பின் தெரியாத அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் சேகர் நுழைகிறார். அதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும், இதனால் சேகர் வாழ்க்கை என்னவானது என்பதும் தான் “எனக்கு End-யே கிடையாது திரைப்படத்தின் கதை.ஊர்வசி வருகையில் இருந்தே சூடு பிடிக்கத் துவங்கும் திரைக்கதையின் டெம்போ அடுத்து எங்குமே குறைவதே இல்லை. சேகர் ஊர்வசியின் வீட்டுக்குள் நுழைகின்ற அந்த தருணத்தில் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது தான். நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது அப்படி அப்படியே நடப்பதால் பார்வையாளனாக நம்மால் திரைப்படத்துடன் ஒன்ற முடிகிறது.அதிலும் சேகரும் ஊர்வசியும் சேர்ந்து டகீலா அ...