Shadow

Tag: Enna Vilai movie

நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ திரைப்படம்

நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ திரைப்படம்

சினிமா, திரைத் துளி
பல கதாபாத்திரங்களில் தனது பன்முக நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'போச்சர்' இணைய தொடர் என தானேற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதிய தமிழ்ப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமா ஆகும். திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் விமர்சன மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' திரைப்படத்தின் அசாதாரண திரைக்கதைக்குப் புகழ் பெற்ற சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் சிறந்த திரைக்கதைக்காக, சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருத...