Shadow

Tag: Florence Pugh

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தானோஸ் மார்வெலில் ஏற்படுத்திய வெறுமைக்குப் பிறகு, மீண்டும் மார்வெலின் மேஜிக் இப்படத்தில்தான் துளிர்ந்துள்ளது. ‘பன்னண்டம்’ என இடியாப்ப குழப்பம் இல்லாத எளிமையான நேரடிக் கதையென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சி.ஐ.ஏ.-வின் இயக்குநர் வேலன்டினா, அவெஞ்சர்ஸ் இல்லாத குறையைப் போக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், “சென்ட்ரி” எனும் சூப்பர் பவர் மிக்க ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில், O.X.E. எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சட்டவிரோதமான முறையில் மனிதர்களைக் கொண்டு பல சோதனைகளை நடத்தி, அதில் தோல்வி காணும் வேலன்டினா, ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்படும் ஆய்வகங்களைத் தடயங்களின்றி அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். ரகசியமானதொரு ஆய்வரங்கத்திற்குச் சென்று, ஆவணங்களைத் திருட வரும் உளவாளியைக் கொல்லச் சொல்லி யெலெனா பெலோவாவிற்கு ஆணையிடுகிறார் வேலன்டினா. அதே சமயம், டாஸ்க் காஸ்டர், ஜான் வாக்கர், கோஸ்ட் எனும் ஆ...