
KPY பாலாவின் ‘காந்தி கண்ணாடி’
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்தத் திரைப்படம், எளிமையையும் நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாகத் தயாரித்துள்ளார் ஜெய்கிரண். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தயாரிப்பாளர் ஜெய்கிரண், “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாகக் கேட்டவுடனே என் நெஞ்சைத் தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக இது உருவாகும் என நம்புகிறேன். பாலா, ஷெரீஃப் மற்றும் மற்ற ...

