யுனிலீவர் கழுத்தைச் சுற்றிய வேதாளம் ரதீந்தரனின் படம்
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தை ரதீந்தரன் ஆர். பிரசாத் இயக்குகிறார். இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ) மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். இப்படம், இந்தியப் புராணங்களில் வரும் பாத்திரங்களை அடிப்படையாக எடுக்கப்படும் பயணச் சாகசத் திரைப்படமாகும்.
இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் புரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் புரிட்ஜ் (Greg Burridge) இப்படத்திற்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத...