
குலேபகாவலி – பொங்கல் விருந்து
KJR ஸ்டுடியோஸ் சார்பாகக் கோட்டபாடி J.ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி". இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகி பாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது.
இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாகப் படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசனக் காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது.
இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. அதிலும் இதில் வரும், "...