
லேடி சூப்பர் ஸ்டார் 2019
நாயகிகள் வெறுமனே மரத்தைச் சுற்றி ஆடிப் பாடும் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போதைய இளம் இயக்குநர்கள் பலர் நாயகிகளைப் பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
இளம் இயக்குநர் U.R.ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதாபாத்திரத்தைப் படைத்து இருக்கிறார். இந்த படம் ஹன்சிகாவின் 50 ஆவது படம் என்பது குறிப்பிட தக்கது. இந்தப் படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது என்றார் ஜமீல்.
"இந்தக் கதையையும் , திரைக்கதையையும் மெருகேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்தக் கதையின் நாயகி அழகும் அறிவும் தீரமும் இளமையும் நிறைய பெற்றவள். ஹன்சிகா உரிமையுடன் இந்தக் கதாபாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வ...


