Shadow

Tag: Hara hara mahadevaki

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜினி...