Shadow

Tag: Heist Tamil Review

பஸ் 657 விமர்சனம்

பஸ் 657 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தன் மகளின் மருத்துவச் சிகிச்சைக்காக, தான் வேலை செய்த கேசினோவை ஜேசன் காக்ஸுடன் இணைந்து கொள்ளையடிக்கிறார் லூக் வான். கொள்ளையடித்து விட்டு ஓடும்போது, தப்பிப்பதற்காக பேருந்தொன்றில் ஏறுகின்றனர். ரோந்துப் பணியில் இருக்கும் க்றிஸியா எனும் காவல்துறை அதிகாரி சந்தேகத்தோடு அப்பேருந்தைத் தொடருவதால், லூக் வான் குழு வேறு வழியின்றி பேருந்தைக் கடத்துகின்றனர். மொத்த காவல்துறையும் அப்பேருந்தை பின் தொடர்கிறது. இச்சிக்கலில் இருந்து லூக் வான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. எந்தப் புதுமையும் இல்லாத கதை. நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை. சில கொள்கைகளோடு வாழ்பவர் ஃப்ரான்சிஸ் சில்வியா போப். ‘எவரையும் திருட அனுமதிக்கக் கூடாது’ என்பது அதில் மிக முக்கியமானது. தொழிலின் பலமே அதில் தான் உள்ளதென உளமாற நம்புபவர். எவரேனும் அப்படித் திருடினால், திருடனையோ - திருடர்களையோ கண்டுபிடித்துச் சலனமேதுமின்றி கொல...