Shadow

Tag: Imaikkaa Nodigal Movie

இமைக்க விடாப் படம்

இமைக்க விடாப் படம்

சினிமா, திரைத் துளி
சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும். இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா - நயன்தாரா - ராசி கண்ணா - பிரபல வில்லன் அனுராக் காஷ்யப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'. 'டிமான்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் சி.ஜெ.ஜெயக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாக இருக்கின்றது. "தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் முக்...
கேமியோ – அதர்வா – ராஷி

கேமியோ – அதர்வா – ராஷி

சினிமா, திரைத் துளி
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பிக் கொண்டு வருகிறோம். முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாகச் செயல்படுவது கதைக்களம் தான். அந்தக் கதைக்களத்தைத் தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்குக் கூடுதல் பலம். சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களைப் போல இந்தப் படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது.இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம்....