7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ரசிகர்களுக்கு இனம் புரியாத உற்சாகமும் மகிழ்ச்சியும் வந்துவிடும். அதுவும் உலகக்கோப்பைப் போட்டி என்றால் இந்திய ரசிகர்களுக்கு டபுள் தமாகா தான்!
இரு அணிகளுக்குள்ளும், இது வரை நடந்த உலகக்கோப்பை போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே வென்றிருக்கிறது. இம்முறையாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தானும், வெற்றியைத் தொடர வேண்டும் என்று இந்தியாவும் களம் கண்டனர்.
ஆஸிக்கு எதிராக போட்டியில் காயமடைந்த ஷிகார் தவான், மூன்று வார ஓய்வில் இருப்பதால் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களம் கண்டார். பாகிஸ்தான் அணியில் ஷாதப் கானும், இமம் வாசிமும் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபரஸ் அகமது, பௌலிங்கைத் தேர்தெடுத்தவுடன் இந்திய ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது, காரணம் இந்த உலகக்கோப்பை டாஸ் வென்று பௌலிங்கைத் தேர்தெடுத்த அணிகள் எல்லாம் 300+ ரன்களை வழங்க...