
இருமுகன் விமர்சனம்
லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை.
ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிகம்...