2 இன் 1 ஜான்ஸன்ஸ் வேட்டி – கே.எஸ்.ரவிக்குமார்
பெரும்பாலும், வேஷ்டி கிராமப்புறத்தில் அணியப்படும் உடை மற்றும் வயதானவர்கள் அணியும் ஆடை என்பது போலவே கருதப்பட்டு வருகிறது. வெளிப்படையாக, Jansons வேஷ்டிகள் இந்த மாயையை உடைத்து, நினைத்துப் பார்க்க முடியாத விஷயத்தைச் செய்து காட்டியிருக்கிறது. புதுமையான டூ இன் ஒன் ரிவர்சபிள் வேஷ்டியைக் கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மைய நோக்கம், இந்தப் பாரம்பரிய தென்னிந்திய ஆடைகளை இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான்.
"ஒரே மொபைல் ஃபோனில் இரண்டு சிம் உபயோகிப்பது போன்ற இரட்டை நன்மைகள் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு மட்டும் இல்லாமல், அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. Jansons இந்தியா அணியின் நீண்ட கால விவாதங்களுக்குப் பிறகு இந்த 2 இன் 1 வேஷ்டி பதிசோதனை முயற்சியை செய்து பார்த்தோம். இந்த 2 இன் 1 வேஷ்டியில் இரண்டு வெவ்வேறு வடிவம...