1+ இன் ஓராண்டு கொண்டாட்டம்
ஒன் பிளஸ் மொபைல் நிறுவனம், ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் ஸ்டோர் தொடங்கி தனது முதலாம் ஆண்டினைக் கோலாகலமாகக் கொண்டாடியது. அக்கொண்டாட்டத்திற்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணமாக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு, அவரது இசையிலிருந்து சில பாடல்களக்ப் பாடி, கொண்டாட்டத்தை மறக்கவியலாத நிகழ்வாக மாற்றினார். சமீபத்தில் வெளியான ஒன் பிளஸ் 7 ப்ரோ (OnePlus 7 Pro) மொபைல் ஒன்றினையும் பார்வையாளர்களுக்குத் திறந்து காட்டினார். ஒன் பிளஸ் சமூகத்தின் அதிர்ஷ்டன் வாயெத ரசிகர்களுக்குக் கையெழுத்திட்டு, அவர்களை மகிழ்வித்தார்.
ஒன் பிளஸின் ஜெனரல் மேனஜரான விகாஸ் அகர்வால், "இந்த ஓராண்டு நிறைவு, எங்கள் இந்தியப் பயணத்தில் முக்கியமான மைல்கல் ஆகும். இந்தப் பயணம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிரத்தையோடு எடுக்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாகும். எங்கள் நோக்கம், இந்தியாவில் 1500 ஆஃப்லைன் ஸ்டோர்கள் தொடங்குவதே! இந்த மகிழ்ச்சியான ...