ஜீவா விமர்சனம்
மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.
ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார்.
நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய் ...