
“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்
அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி”சிங்கிள் பாடலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது, “அனிருத் எங்களது உயிர் நண்பர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஜிகிடி கில்லாடி” பாடல் எங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றிக் கூட்டணி. இப்பாடலின் அசுர வெற்றி அத...

