Shadow

Tag: Kaa Andrea movie thirai vimarsanam

கா – The Forest விமர்சனம்

கா – The Forest விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கா என்றால் காடு அல்லது கானகம் என்பதாகப் பொருளென உருவகப்படுத்தியுள்ளனர். ஆனால், 'கா' என்றால் காத்தல் என்று பொருள் கொள்ளலாமே அன்றி காடு எனக் கொள்ளலாகாது. ஆதியும் காடே, அந்தமும் காடே என்ற பாடல் வரிகளுடன் அடர்ந்த காட்டின் அட்டகாசமான விஷுவல்ஸுடன் படம் தொடங்குகிறது. கடுகுபாறை வனக்காவல் நிலையத்தின் அருகே முகாமிட்டுள்ளார் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான வெண்பா சுப்பையா. மதி என்ற பயந்த சுபாவிக்கு அவரது தந்தையின் வேலை கிடைத்து, கடுகுபாறை வனக்காவல் நிலையத்தில் பணியில் சேருகிறார். அரசியல் பேசி வில்லங்கத்தை உண்டாக்கும் ஓர் இளம்பெண்ணைக் கொலை செய்ய, அம்மலை வனப்பகுதிக்கு வருகிறார் விக்டர் மகாதேவன். இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. மதி பாறையிடுக்கில் கீழே சகதியில் விழுந்து, மேலே வெளிச்சத்தைப் பார்ப்பது மஞ்ஞுமள் பாய்ஸில் வரும் காட்சி போலவே உள்ளது. விழுந்து கிடக்கும் இடத்தில் இருந்து மேலே வர இயல...