Shadow

Tag: Kadhal kasakudhaiya thirai vimarsanam

காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம். அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் கா...