தோழர் வெங்கடேசன் விமர்சனம்
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டும் கதையை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் இயக்குநர் மகாசிவன்.
அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் லாக் ஆகி, லட்சுமி சோடா ஃபேக்டரி முதலாளியான வெங்கடேசன் மீது மோதிவிடுகிறது. அவ்விபத்தில் அவரது இரண்டு கையையும் பறி கொடுக்கிறான் வெங்கடேசன். நஷ்ட ஈட்டிற்காக நீதி மன்றத்திற்கு நடையாக நடக்கிறான். தீர்ப்பு சாதகமாக அமைந்த பின்பும், அவருக்கு நியாயம் கிடைக்காமல் அவஸ்தைகள் தொடர்வதுதான் படத்தின் கதை.
‘ஓய்ய்.. நானொரு முதலாளி’ என்ற குரலை மிக அழுத்தமாகப் பதிகிறான் வெங்கடேசன். பதிவதோடு மட்டுமல்லாமல், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவரிடத்தில் அதைக் காட்டவும் செய்கிறான். அப்படி அதிகாரத்துடன் நடந்து கொள்வதைக் கெளரவமாகவும் கருதுகிறான். இத்தகைய பூர்ஷ்வாத்தனத்தை உடைய வெங்கடேசனுக்கு தோழர் என்ற அடைமொழி வைத்திருப்பது பயங்கரமான மு...