Shadow

Tag: Kalorful Beta Movement

இந்தியாவின் முதல் தபால் மனிதன் – ‘ஹர்ஹாரா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

இந்தியாவின் முதல் தபால் மனிதன் – ‘ஹர்ஹாரா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

சினிமா, திரைத் துளி
கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட் (Kalorful Beta Movement) தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரைத் தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார். நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன், இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வி1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஓர் அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்காலத்தில் டிஜிட்டல் வசதி...
V1 விமர்சனம்

V1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விசயத்தை மீள் விசாரணை செய்வதாக முடிகிறது. லிவிங் டுகெதரில் இருக்கும் ஒரு ஜோடியில், பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவளின் காதலன், ‘கொலையை நான் தான் செய்தேன்’ என ஒப்புக் கொள்கிறான். ஆனால் கொலையை அவன் செய்யவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார் என்ற கேள்வியோடு படம் விரிகிறது. யார் கொலைகாரர் என்ற கேள்வியில் பயணிக்கும் படத்தில் திருப்புமுனைகள் தான் பிரதானம். V1 படத்தில் அது திரும்பும் இடத்தில் எல்லாம் இருக்கிறது. அவையெல்லாம் நம்மை ஈர்ப்பதற்கான திருப்புமுனைகளையே ஒழிய லாஜிக் ரிதீயான திருப்புமுனையாக இல்லை. இதுதான் இப்படத்தின் சறுக்கல். நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ சிரமம் இல்லாமல் நடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் சிரமப்பட்டிருக்கிறார். நாயகி விஷ்ணுபிரியா ஓரளவு அவரின் காதாபாத்திரத்திற்குரிய நியாயத்தை நடிப்பில் சேர்த்துள்ளார். லிஜீஸ் ...